மாற்றுத்திறனாளி
கால்களை இழந்திருப்பான்
ஆனால்
கரையேர துடிப்பான்
விழிகள் வாழ்நாள் விடுமுறை
எடுத்திருக்கும
ஆனால்
இவனோ இருட்டிலும் திரட்டுதல் செய்வான்
'நா' அது நடையை இழந்திருக்கும்
ஆனால்
இவனோ மூச்சுக்காற்றில்
இசையமைப்பான்
இருந்தும் பலர்
உள்ளத்தில் உறுதி கொள்ளாமல்
உடலை வீணாய் வளர்க்கிறார்கள்
சலாம் மாற்றுதிறனாளிகளுக்கு