பொய்க்கால்கள்
அந்த
ஆம்பூர் லெதர் பர்ஸை
நூறு ரூபாய்க்குச்
சொல்லி,
ஐம்பது ரூபாய்க்குக்
கேட்கப்பட்டு,
பேரம் கட்டாது
என்று
அடுத்த ஆள் நோக்கி
நகர்ந்த
அந்த மாற்றுத்திறனாளி
தனது
கக்கத்தில் இருந்து
தொடங்கிய
பொய்க்கால்களால்
உண்மையாக
நடந்து போய்க்கொண்டிருந்தான் !