தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பாடல்

வாழ்கையில் தோல்விகள் வந்தாலும்
துவளாமல் உறுதியாய் சமாளிப்போம்

வெற்றியில் களிப்பும் தோல்வியில் சலிப்பும்
எல்லையை மிஞ்சுதல் முறையாகுமோ ?

சோகம் தன்னை மனத்தினில் விதைத்து
மதி கெட்டு போனால் நன்மையுண்டோ ?

ஆறுதல் தேடி அலைந்து திரிந்து
குடிக்கு அடிமை ஆகலாமோ ?

கருத்தினில் தெளிவும் மனதினில் துணிவும்
வளர்த்திடு நீயும் என்நண்பா...

துன்பங்கள் யாவும் பனிபோல் விலகும்
நிச்சயம் அதுவே நம்பிக்கை !!!


உனக்கு நீயே தண்டனை அளித்து
உயிரை மாய்தல் தர்மமில்லை

சோதனை வென்று சாதனை படைத்தவர்
சரித்திரம் கொண்டு வாழ்கின்றார் ....!!!

எழுதியவர் : வீ.ஆர்.கே (2-Apr-15, 7:14 am)
பார்வை : 546

மேலே