தமிழாய்த் தமிழுக்காய்
தமிழாய்த் தமிழேக் கதியாய்த்
------- தழைத்து ஓங்கி னாலும்
அமிழ்தாய்த் தமிழில் 'ழ 'கரம்
-------- அழகுற ஆட்சிச் செய்யினும்
பழுதாய்த் தமிழை மக்கள்
-------- பாரினில் படித்திட் டாலும்
விழுதாய்த் தமிழே நீயும்
--------- வீணர் தம்கைப் பொருளே !.
இதந்தரும் தமிழை நீக்கி
-------- இடர்மிகு சிறைப்பட் டாலும்
பதமுடை மக்கள் வாழ்வைப்
-------- பழிமிகுந் திடமாற் றினாலும்
விதந்தரு இன்னல் கோடி
-------- விளைத்திட முற்ப்பட் டாலும்
நிதமுனைத் தமிழே யானும்
--------- நின்னை மறந்திடு வேனோ ?
காலையில் எழுந்த வுடன்
--------- கன்னித் தமிழ்ப்பே சிடுவோம் .
சோலையில் மலர்கள் தாமும்
--------- சுகமா கப்பூப் பூத்திடும் .
மாலையில் மேற்றி சையில்
--------- மயக்கத் திலும்தமிழ் மலரும் .
ஓலையில் எழுதி வைத்தே
---------ஓதிடு தமிழே உயிரென ...
வெயிலுக் கேற்ற நிழல்போல்
------- வீசும் தென்றல் காற்றில்
கையில் கம்பன் கவியொடு
-------- கன்னி மொழிவாழ் கவென்று
மையல் தமிழே உன்னிடம்
-------- மயங்கு கின்றேன் நானும்
வையம் வாழ வகைசெய்
---------- வாழும் தமிழே வாழ்கவே !