மன்மத ஆண்டே
மன்மத ஆண்டே ! மகிழ்ச்சி கொடுத்திட
கன்னித் தமிழ்மொழி காத்திட - என்றென்றும்
அன்பால் மனிதம் அழகாய் மலர்விக்க
இன்றுநீ பூத்தாய் இனிது .
(மலர்ந்த மன்மத ஆண்டு சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு தந்து மகிழ்விக்கட்டும் )
எழுத்து குழுமத்திற்கும் , எழுத்து தள சொந்தங்களுக்கும் , நட்புகளுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....!!

