உள்ளக்கிடக்கைகள்

உள்ளக்கிடக்கைகள் ஒன்றா இரண்டா
ஓராயிரம் உண்டு மாறுபட்ட மனனங்கள்

மழையோ இல்லை மக்களவை தேர்தலோ
சாதியோ இல்லை சமய சண்டையோ

சாகா காதலோ இல்லை செத்துப் போதலோ
வேண்டும்! இல்லை! இல்லை! வேண்டாமென

வெறி கொண்டு அலையும் மாந்தர்-இவர்
வேட்கை கண்டு வெட்கியே இறைவன்

முரண்பட்ட வேண்டுதலை மொத்தமாய்
மூடமனிதர் வேண்டாம் என வெறுத்தானோ ?

காற்றாய் கரைந்து மறைந்தானோ இல்லை
கல்லாய் அவனியில் உறைந்தானோ?

எழுதியவர் : முரளி (19-Apr-15, 2:22 pm)
பார்வை : 64

மேலே