மக்களின் நலன் கருதி கோகோ கோலா ஆலைக்கு தடை விதித்த தமிழக அரசு அதெல்லாம் ஒன்றுமில்லைமக்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள் என்பதால்
மக்களின் நலன் கருதி கோகோ கோலா ஆலைக்கு தடை விதித்த தமிழக அரசு...? அதெல்லாம் ஒன்றுமில்லை....மக்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள் என்பதால்...!
விவசாயிகளின் தொடர் போராட்டங்களை தொடர்ந்து, ஈரோடு பெருந்துறையில் கோகோ கோலா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட, தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோகோ கோலா நிறுவனத்துக்கு தமிழக அரசு இடம் ஒதுக்கியிருந்தது.
பெருந்துறை தொழில் வளர்ச்சி மையத்தில் சுமார் 71.3 ஏக்கர் நிலம் அந்நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அங்கு ரூ.500 கோடி செலவில் குளிர்பானங்கள், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றைத் தயாரிக்கும் ஆலையை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
தினமும், 30 லட்சம் லிட்டர் தண்ணீரை, மிகக் குறைந்த விலையில் அரசிடம் பெற்று, திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடத்தில் தொழிற்சாலை அமைத்தால் ஏராளமான நிலத்தடி நீரை அந்நிறுவனம் உறிஞ்சும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும், சில கட்சிகளும், கோகோ கோலோ நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
ஆலை அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் 99 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சரி போகட்டும்....இவங்கே தயாரிக்கிற எந்த ஒரு குளிர் பானமும் நன்றாகவோ / சுவையாகவோ இருப்பதில்லை....அதிலும் குளிரூட்டினால் மட்டுமே இந்த கருமாந்திர குளிர்பானத்தை குடிக்கவே முடிகிறது....
உண்மையைச் சொல்லுங்கள்..... இவங்கே தயாரிக்கிற ஒரு குளிர் பானமாவது குடிக்கிற மாதிரியா இருக்கு....?
இந்த லட்சணத்துல தோணி முதல் விஜய் / ஷாருக்கான் வரை அணைத்து வித பிரபலங்களும் டிவி க்களில் தோன்றி....
கோகோ கோலா குடி....மிராண்டா குடி...மவுண்டன் டியூ குடி... கோமியத்தை குடி
என்று இந்திய மக்களை மோசடி செய்து வருகிறார்கள் எனலாமா...?
- சங்கிலிக்கருப்பு -