நேபாளத்தில் இந்துக் கோவில்கள் கடும் சேதம் தங்களது கோவிலைக் கூட காப்பாற்ற முடியாத கடவுளாமக்களை காப்பாற்றுவது

நேபாளத்தில் இந்துக் கோவில்கள் கடும் சேதம்...! தங்களது கோவிலைக் கூட காப்பாற்ற முடியாத கடவுளா....மக்களை காப்பாற்றுவது...?

கடவுள் இல்லை....கடவுள் இல்லவே இல்லை.....! என்ற பெரியாரின் கூற்று காலம் கடந்து நிற்பவை....!
காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள புகழ்பெற்ற ஹிந்துக் கோயிலான காஸ்தாமண்டபம் கடுமையாக சேதமடைந்துள்ளது.

கடந்த 16 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மூன்றடுக்கு கோயிலை அடிப்படையாகக் கொண்டுதான் "காத்மாண்டு' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இங்குள்ள பஞ்ச்தலே கோயில், தசாவதாரக் கோயில், கிருஷ்ணர் கோயில் ஆகியவையும் இடிந்துள்ளன.

9 அடுக்கு கட்டடமான வசந்தபூர் தர்பாரில் உள்ள ஹனுமான் கோயில் உள்ளிட்டவையும் மோசமாக சேதமடைந்துள்ளன.

பட்டான், பக்தாபூர் ஆகிய இடங்களில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும், கோயில்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

நிலநடுக்கத்தின் விளைவாக சேதமடைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னங்களையும், கோயில்களையும் திரும்பக் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சவாலான விஷயம் என்பதுடன் அதற்கு அதிக செலவாகும்.

மேலும் இவற்றை, நிலநடுக்கத்துக்கு முன்பிருந்தபடி மீண்டும் கட்டுவது இயலாத காரியமாகும்....

அணைத்து மதங்களும் / கடவுள்களும் சீர்திருத்தத்துக்கு உட்பட வேண்டும்....குறைந்த பட்சம் ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டன அணைத்து மதங்களும் தோன்றி..... இன்றைய காலத்துக்கு ஒவ்வாததாக உள்ளன மதங்களின் சட்டங்களும் நீதி போதனைகளும்....மேலும் மத அடிப்படைவாதிகள் தோன்றா வண்ணம் மத சட்ட திட்டங்கள் திருத்தப்பட வேண்டும்......

அணைத்து மதங்களில் இருந்தும் முற்போக்காளர்கள் / சீர்திருத்தவாதிகள் / இடது சாரிகள் உருவாக வேண்டும்...அன்றேல் மனித குலம் விடுதலை பெற முடியாது என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்...

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Apr-15, 4:03 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 113

மேலே