பணத்துக்கு பணியாத பதவி,புகழ்
பதுக்கி வைத்து,பதுக்கி வைத்து பாதுகாக்கிறான்
பணம் படைத்த முதலைஎன்று பேரு சேர்க்கிறான்
கோடிகளை அடிக்கிவைத்து அழகு பார்க்கிறான்
கொடுத்துதவ மனசு இல்லை கொள்கை பேசுறான்
************
ஏழையினை பிச்சைக்காறன் என்று தூற்றுறான்
ஏவலுக்கு ஆளுவிட்டு விரட்டி ஓட்டுறான்
காவலுக்கு நாயவைத்து காலம் தள்ளுறான்
கஞ்சன் இவன் நன்றியின்றி பஞ்சம் கொள்கிறான்
************
உழைத்துழைத்து உயர்த்திவிட்ட மக்கள் என்கிறான்
ஊர்முழுக்க தன் உறவு உள்ளதென்கிறான்
உள்ளதெல்லாம் அவர்களுக்கே உரிமம் என்குறான்
உதவியென்று வந்து விட்டால் யார் நீ என்குறான்
************
பதவி,புகழ் உள்ளவனின் படியில் நிற்கிறான்
பரம் பரையின் பணபலத்தை அவன் முன் விற்கிறான்
சரிசமம் நான் என்று பல சாட்டு சொல்கிறான்
சறுக்கிய பின் மூக்குடைந்து ஏசி வைகிறான்
************
காசு,பணம் வாழ்க்கையில்லை கவலை கொள்கிறான்
கற்றுயர்ந்த நல்ல பண்பு தேவைஎன்கிறான்
இளந்ததனை தேடியவன் இப்ப ஏங்குறான்
இருந்ததனை ஈந்ததன் பின் நன்கு தூங்குறான்.
************
ரோஷான் ஏ ஜிப்ரி-.இலங்கை.

