வேறொரு மழை -ரகு

ஓர் அடைமழை நாளில்
மிக விமரிசையாகத் தொடங்கிற்று
காகிதக் கப்பலின் முன்னோட்டம்
அதன் ஒய்யார நகர்தலில்
லப் டப் துடிப்புகள் வேகமெடுத்தது
தருண மாற்றங்கள்
நிகழத்தொடங்கிய மணித்துளிகளில்
பெருந்துளிகள் வாங்கிக் கவிழ்ந்ததோடு
தெரு வழிசல்களில் சிக்கியும்
தொலைந்திருந்தது கப்பல்
இப்போதும் வலிக்குப் பிறகான
பேரமைதி கலைத்து
துரிதப்பட்டிருந்தனத் தெருக் குழந்தைகள்
வேறொரு காகிதம் வேறொரு கப்பல்
வேறொரு மழை !

எழுதியவர் : சுஜய் ரகு (28-Apr-15, 9:05 pm)
பார்வை : 277

மேலே