மே தினம் - வாழ்த்து சொல்ல அல்ல போராடச் சொல்லும் மே தினம்

மே தினம் - வாழ்த்து சொல்ல அல்ல....! போராடச் சொல்லும் மே தினம்..!
ஐந்து மணி நேர வேலை....
அனைவரும் அரசு ஊழியர்....
நூறு கோடிக்கு மேல் உள்ள அணைத்து தனியார் ஆலைகளும் / நிறுவனங்களும் அரசு துறையாக அறிவிக்க வேண்டும்....
நூறு கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துக் கொள்ள உரிமை இல்லை....
உணவு / உடை / இருப்பிடம் / கல்வி / மருத்துவம் / மின்சாரம் / குடிநீர் / போக்குவரத்து / கழிவு நீர் / குப்பை / சாக்கடை / புகை இல்லா நகரம் / கிராமம் / புறநகர் அடிப்படை உரிமையாக வேண்டும்....
இயற்கை உணவு அடிப்படை உரிமையாக்க வேண்டும்...
கலப்படம் இல்லா / ஹை பிரீடு இல்லா உணவுப் பயிர்கள் / புரதம் / மீன்கள் / ஆடுகள் / மாடுகள் மற்றும் இன்ன பிற கடல் உணவுகள் அடிப்படை உரிமையாக்க வேண்டும்...
வெள்ளைக் கலர் இல்லா அரிசி / கோதுமை / சர்க்கரை அடிப்படை உரிமையாக்க வேண்டும்...
டீ எஸ்டேட் / காபி எஸ்டேட் அழிக்கப்பட்டு காடுகளாக மாற்றப்பட வேண்டும்....
ஆறுகள் / கடல் / குளம் / குட்டை / ஏரி இவைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும்....
அப்பார்ட்மென்ட் என்ற குடியிருப்பு ஜெயில்களை அகற்ற / தடை செய்ய வேண்டும்...
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்...
ஜெயில்கள் / சிறைச்சாலைகள் கற்றுக்கொள்ளும் இடமாக அறிவிக்கப்பட வேண்டும்....
இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக....
பெரும்பான்மை மக்களுக்கான அரசு ....
அதிஉயர் ஜனநாயகம்...
வெளிப்படையான அரசு......
இவைகள் கிடைத்திட / பெறுவதற்கு இன்று உறுதி மேற்கொள்வோம்....
போராடுவோம்....வெற்றி பெறுவோம்....!
- சங்கிலிக்கருப்பு -