காவியமானவள்-பகுதி4

வீறுநடை போட்டு ஆனந்த் வீட்டை விட்டு வெளியேற வாசற்க்கதவை நோக்கி நடந்தான்...
கை அழும்புவதைப்போல ஜாம்பவம் செய்த தமிழினி தண்ணீரை ஆனந்தின் முகம் நோக்கி அள்ளி இரைத்தாள்
இதனை சிறிதும் எதிர்பாராத ஆனந்த் என்ன பக்கி இது தண்ணீர் இரைத்து விளையாட உன் மாமன் மகனா நானென சூச்சமத்தோடு கேட்க...
அப்படி இருந்தால் தான் விளையாட வேண்டுமா, இல்லைனா கூடாதா என அவளும் பொடி வைத்து பேச ஆரம்பித்தாள்...
விளையாடலாம் ஆனா இதுலாம் உனக்கே ஓவரா தெரியல பக்கி...
என கொஞ்சல் தோய்ந்த குரலில் முகத்தில் வடிந்த தண்ணீரை அணிந்திருந்த சட்டையின் கீழ் நுணியை பற்றி துடைத்துக்கொண்டிருக்க படாறென தனது துப்பட்டாவை கொடுத்து துடைத்துக்கொள் என்றாள் தமிழினி...
இல்ல தமிழ் பரவாயில்லை...
ஏன்டா நான் கொடுத்தா வாங்க மாட்டயா என அதட்டலாய் கேட்க உரிமையோடு வாங்கி துடைத்துவிட்டு தமிழினியின் கையில் நுளைத்தான் அதைப்பற்றிக் கொண்ட தமிழ் தன் மார்போடு போர்த்திக்கொண்டாள்,
சரி தமிழ் நான் வருகிறேன் என கூறி எட்டி நடந்தான் ஆனந்த்...
வீட்டு வாசலில் ஆனந்தின் தந்தை பனிக்கு போய்ட்டு வந்த களைப்பில் தேநீர் கோப்பையை கைகளில் ஏந்தி சுவைத்தவாறு மாலை இதழை புரட்டிக்கொண்டிருந்தார்...
வாசற்கதவு அருகில் நுழையும் போதே தன் அப்பா சேகர் வந்துவிட்டாரா என
படிகட்டு அருகில் அவர் காலணியை கண்காணித்து பிறகு தான் உள் நுளைவான் ஆனந்த்...
ஊர் சுற்றுவதை என்னாலும் விரும்பமாட்டார் அவர்...
கண்டிப்பு மிக்கவர் தேர்வு நேரங்களில் தன் பனிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு மகனின் தேர்ச்சியே முக்கியம் என அருகில் அமரச்செய்து கண்டிப்போடு பாடம் சொல்லிக் கொடுப்பார் தனித்தேர்வு வைத்து குறையும் மதிப்பெண் வீதத்திற்க்கு தகுந்த பிரம்படியும் உண்டு...
இத்தகைய கண்டிப்பு இல்லையென்றால் தான் சத்தியமாக பள்ளி கல்வி முடித்து தலைச்சிறந்த கல்லூரியில் மெரிட்ல் படிக்க வாய்ப்பே இல்லையென பல முறை ஆனந்தே சொல்லியதுண்டு...
கண்டிப்பு மிக்கவரானாலும் அவரை ஒரு நாளும் வில்லனாக சித்தரித்ததே இல்லை ஆனந்த் மாறாக நாயகனாகவே பாவித்து அவரைப் போல விடாமுயற்சியுடனும்,
தீவிர நாட்டுபற்றுடனும் வாழ்வில் முன்னேற வேண்டுமென்பதே ஆனந்தின் இலட்சியம்...
அப்படியான குணநலன்களை தீவிரமாக செயல்பாடுகளிலும் காட்டக்கூடியவனும் கூட...
மெல்ல அஞ்சியே வீட்டின் உள் வாசற்படியை நுளைந்தான் ஆனந்த் ...
அப்பா முகம் முன் மாலை இதழை நீட்டி படித்திக்கொண்டிருப்பதை தப்பிப்பதற்க்கான தருணமென எண்ணி ஒருபக்கமாக திரும்பிய நிலையில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தான்...மகனின் திருட்டுத்தனத்தை அறியாமல் இருப்பாரா இத்தனை நாள் பார்த்து பார்த்து வளர்த்தி வந்த தந்தை...
டேய்!!!எங்கடா போய் சுத்திட்டுவர என அகண்ட விழிகளோடு கடியத்துவங்கினார் சேகர்...
அப்பா....
அது வந்து
சொல்லுடா எத்தனை தடவ திட்டுனாலும் திருந்தாத ஜென்மமடா நீ...கண்டவனோடு சேர்ந்து ஊர் சுத்தாதடானு சொன்னா எல்லளவும் கேட்கறதில்ல,போன வாரம் கூட சாரயம் குடிக்க கூட்டிட்டு போவத போல கூட்டிட்டு போய் அவனுக்கு ஊத்தி கொடுத்து சுய நினவ இலக்கச் செஞ்சு வண்டிய எடுத்துகிட்டு நம்பர் பலகைய மரச்சு சாலைல போர நான்கு சக்கர வாகனத்த நிருத்தி கலாட்டா பண்ணி திருட முயன்று இப்ப கம்பி எண்ணிட்டு இருக்றானுக...
பாவம் மது குடிக்க ஆசைப்பட்டு போன அந்த பையனும் மாட்டிவிட்டு, படிப்பயும் துலச்சு,ஊருக்குள்ள இருந்த நல்ல பேரையும் துலைக்கச்செய்து
குடும்ப அந்தஸ்தையும் அஷ்த்திவாரத்தோடு சாச்சுபுட்டானுக...
அப்படி இப்படி ஏடாகொடம் எதாச்சும் ஆகிட கூடது நண்பனுனு எவன் கூடயும் எங்கயும் சேர்ந்து சுத்தாதடானு சொன்னா எரும மாட்டுல மழை பேஞ்ச மாதிரி எந்த சுரணையும் இல்லாம இருக்றது...
வீட்டுல இருக்றவளும் பையன் எங்க போரான் வாரானு கேக்றதில்லை என்று திட்டித்தீர்த்தார்...
அத்தனை பேச்சுக்களையும் உள்வாங்கி கொண்டு அப்பாவின் முன் தலை குணிந்து நின்றபடி இருந்தான் ஆனந்த்...
மறு ஆராதணைக்கு ஆயத்தமாகும் வேலையில் அம்மா கொடிமலர் முற்ப்பட்டு நடந்ததை விவரித்தார்...
ஏண்டா வாய திறந்து சொல்ல மாட்டயா?
தமிழ் வீட்டுக்கு தான் போனேனு, அப்பா என்ன திட்டுனாலும் வாங்கிக்க வேண்டியது அப்றம் நான் வந்து சமாதானப்படுத்த வேண்டியது இதுவே பொழப்பா போச்சு எனக்கு என ஆனந்தின் அன்னை தன் பங்கை கனக்கச்சிதமாய் செய்து முடித்தாள்...
சேகரும் சற்று மனம்மாறி, அத சொல்ல வேண்டிதாண்டா இங்கதான் போனேனு
சொன்னா இவ்ளோ பேச்சு பேசிருப்பனா?
என அருகில் அலைத்து சமாளித்தார்...
இல்ல அப்பா நீ திட்டாம வேற யாருக்கு என்ன திட்டர உரிமை இருக்கு என் நல்லதுக்குதான பேசரிங்க நீங்க இப்படி பேசலனா அந்த பசங்க பணணுன கொடுமை எனக்கு தெரியாமலேயே போயிருக்கும் இனி இது போன்றவர்கள் நட்பை தவிர்க்க முற்ப்படுவேன் என அப்பாவின் அருகில் அமர்ந்து அன்போடு பேச துவங்கினான் ஆனந்த்...
சேகர் மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தார்...
இருவருக்குள் நடக்கும் அன்பு உரையாடலை கேட்டு ஆனந்த கண்ணீரில் மகிழ்ச்சியில் மனம்நிறைந்தாள் கொடிமலர்...
கொடி ஆனந்த கண்ணீர் வடிச்சது போதும் ஆனந்துக்கு போய் சாப்பாடு எடுத்து வை என ஆனந்த் ரைமிங்காக பேச அடிவாங்க போறடா என செல்லமாக அதட்டி கணவர் சேகரையும் கை அழும்பி வாருங்களென சாப்பிட அழைத்தாள் கொடி...
இருவரும் கை அழும்பி சாப்பிட அமர்ந்தனர்...என்ன சமையல் செஞ்ச கொடி என அப்பாவிற்க்கு முன்னே மறுமுறையும் தன் அம்மாவின் பெயரைச் சொல்லி அழைத்தான் ஆனந்த்...
கொடிமலருக்கும் அவன் அப்படி செல்லமாக அழைப்பதுதான் பிடிக்கும்,எல்லா நேரங்களிலும் அப்படி அழைக்க மாட்டான் ஆனந்த் அன்பு மிகுதியின் போதும் கவலையில் தோய்ந்த போதும் அப்படியான பானியில் அழைப்பது வழக்கம்...
அப்படி அழைக்கையில் மலர்கொடியும் ஆனந்தமடைவாள்...
உனக்கு பிடிச்ச தக்காளி சாதம் சப்பாத்திடா என கொடிமலர் எடுத்துவைக்க இவ்வளவு வேண்டாம் கொடி அப்பாவுக்கு வை நான் தமிழ் கையாள கேசரி ஃபுல் கட்டு கட்டிட்டேன் என சொல்லி இரண்டு சப்பாத்தி மட்டும் உண்டு இரவு வணக்கம் சொல்லி தன் படுக்கை அறைக்கு சென்றான் ஆனந்த்...
சிறு நிமிட யோகாவிற்க்கு பிறகு மெத்தையில் சாய்ந்தவன் மெய்மறந்து போனான் தமிழ் கண் முன் வந்து வந்து சென்றாள் தண்ணீரை துடைக்க அவள் கொடுத்த துப்பட்டா அவன் முகம் வருடுவதைப்போல உள்ளூர உணர்வு...
தான் ஏன் இப்படி ஆனேன்?
தமிழை இது வரை ஓர் தோழியாக மட்டும் தானே பார்த்தேன் அவளும் அப்படித்தான் பழகினாள் ஆனால் இன்று அவள் நடந்துகொண்ட விதம் வியப்பளிக்கிறதே?!...
தன் மனதிடம் முறையிட்டான்
தந்தையிலா குடும்பம் அவள் அன்னை தன் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை கெடுத்து காதல் வயப்பட்டு எனை சிதைத்துவிடாதே என புழம்பினான்...எதையும் பொருட்படுத்தவில்லை மனம்
மீண்டும் மீண்டும் தமிழின் நிலா முகமதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன...புரண்டான் தூக்கம் கண்களை தழுவவில்லை...
தலையணையை கட்டி புரண்டான் மானம்கெட்ட மனது மதிமயக்கியது பிறை முகமதை பிழையின்றி கண்முன் நிலைநிறுத்தியது
மகிழ்ச்சி,துன்பம்,தோல்வி
இவை ஏதேனும் தன்னை ஆட்கொள்கையில் நல்ல நண்பாக நினைத்து பகிர்ந்து கொள்வது அவனது டைரியிடம் மட்டுமே...கையிலெடுத்தான் கவி வரைய துவங்கினான்...காதல் வழிந்தோடின எழுதுகோளின் கூர் முனைவழியே ஆனந்தின் கற்ப்பணைகளை கவர்ந்து...
தோழி உனை கரம்படிக்கும்
நாளை நான் கனவிலும்
நினைத்ததில்லை...
உன் மகிழ்ச்சியில் உறவாடி...
தோள்வியில் தோள் கொடுத்து...
தோழனாக இருக்கவே
விரும்பினேன்
துப்பட்டாவில் தண்ணீர்துளிகளை
துடைக்கச் செய்து
மன வலியை கூட்டிவிட்டுச்
சென்றுவிட்டாயடி!!!
காதல் கண்களால் துவங்கும்
முதல் நாளே இவ்வளவு
இரணமானதாக அமையுமா???
கேள்விக் குறியோடு முடித்தான்...
தூக்கம் கண்களை தழுவ மறுபடி சாய்ந்தான் மெத்தையில்...
தமிழை நினைத்து...
- காவியமாவாள்

எழுதியவர் : கிருபானந்த் (7-May-15, 9:55 pm)
பார்வை : 265

மேலே