படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை --களவாணி

கர்வமில்லா காதல் கவிதை அவள்..!!
முத்தப் பிழையுடன்
மொத்த உயிரையும்,
மெல்லிய வரிகளில்
துல்லியமாக அள்ளிக் கொள்கிறாள்...!!
மருதாணி பூசாத களவாணி அவள்,
கோவத்தில் சிவக்கிறாளா இல்லை
மோகத்தில் மிதக்கிறாளா..?
மொத்தத்தில் காதல் வேகத்தில் வெல்கிறாள்..!!
அக்கம்பக்கம் குறித்து
அக்கறை இல்லாதவள் அவள்..!!
மெதுவாய் பக்கம் போனதும்
சொர்க்கம் வந்ததாய்
வெக்கம் கொள்கிறாள்...!!
பாரதியின் செல்லம்மா போல
செல்லமானவள் அவள்..!!
கொஞ்சம் கொஞ்சிப் பேசி
இடைவெளியற்ற
கடைவிழியில் கைது செய்கிறாள்...!!
காந்தமாய் ஒட்டிக் (கொல்லும்) கொள்ளும்
வெள்ளை தேசத்து
கொள்ளைக்காரி அவள்,
நேர் எதிர் துருவமின்றி
புருவங்களில் ஈர்க்கிறாள்..!!
--------------------------------------------------------
மேற்கண்ட கவிதை எனது சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்..
மு.மனோ ரெட்
கைப்பேசி எண்: 9600788986