தோற்றாலும் எழுவோம் கவிஞர் இரா இரவி

தோற்றாலும் எழுவோம் ! கவிஞர் இரா .இரவி !

தோல்விக்குத் துவண்டு விடும் சராசரியல்ல
தோல்விக்குப் பின்னும் முயன்று வெல்வோம் !

ஆயிரம் முறை முயன்று வென்றிட்ட
அற்புத எடிசன் வரலாறு அறிந்தவர்கள் நாங்கள் !

பதினேழு முறை முயன்று வென்றிட்ட
பண்டைய கசினிமுகமது கதை படித்தவர்கள் நாங்கள் !

ஒரே ஒரு முறை முயன்று தோற்றதும்
ஓடி விடும் கோழைகள் அல்ல நாங்கள் !

வீரத்தை இந்த உலகிற்கு கற்பிதா ஆசான்
வீரத்தின் அடையாளமாக விளங்குபவர் நாங்கள் !

இந்தமுறை தோற்றாலும் அடுத்தமுறை வெல்வோம் !
எல்லாமுறையும் தோறபோமென எண்ணாதீர் !

வெற்றி என்பது யாருக்கும் நிரந்தரமன்று
வெற்றி என்பது எதிரிக்கும் நிரந்தரமன்று !

வெற்றி மாலை நாளை எங்கள் தோள்களில்
வீரவசனம் பேசுவதை நிறுத்திடுக இனிய எதிரிகளே !

தோல்வி என்ற படிக்கட்டில் ஏறி விட்டோம்
வெற்றி எல்லையை அடைந்தே தீருவோம் !

வெற்றி வசமாகும் நாள் தூரத்தில் இல்லை
வெற்றிக்கு வழி வகுத்தால் தோல்வி இல்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (13-May-15, 9:08 pm)
பார்வை : 62

மேலே