யாராவது இதற்கு கவிதை எழுதுங்களேன் ப்ளீஸ்

முன்னறிவிப்பு
இது கவிதையில்லை யாசகம்

கடந்த சிலி போரில்
பெற்றோரை பறிகொடுத்த சிறுவன்
அவர்கள் சாமாதிகளுக்கிடையே
இப்படித்தான் உறங்குகிறானாம்
தினமும்

இதற்கு கவிதை எழுத நினத்தபோது
பேனா முனை முறிந்து முறிந்து போனது
எழுதிய சில வார்த்தைகளையும்
கண்ணீர் அழித்துவிட்டது
கண்ணீரில் நனைந்து
காகிதமும் கிழிந்துவிட்டது
டைப் செய்யும் போதெல்லாம்
கணிணியோடு
என் சிந்தனைகளும் ஸ்தபித்துவிடுகின்றன

யாராவது கவிஞர் பெருமக்கள்
இந்த வலியை
எழுத்தில் பதிவு செய்வீர்களா ப்ளீஸ்

சிறந்த கவிதைக்கு
தக்க சன்மானம் கொடுக்கும்
தரத்தில் நான் இல்லையென்றாலும்
சரியான தளத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்

எழுதியவர் : பிரணவன் (13-May-15, 10:59 pm)
பார்வை : 120

மேலே