சரியான தீர்ப்பு

சரியான தீர்ப்பு

யோவ் அந்தப் பையன் உங்க வீட்ல இருந்து பத்தாயிரம் ரூபாயைத் திருடன போது கையும் களவுமா அவனப் பிடிச்சிட்டீங்க. பணத்தை வாங்கிட்டீங்க இல்லையா?

ஆமாங்க நாட்டாமை.

அப்பிடின்னா அவன் செஞ்சது திருட்டே இல்லை. அதனால அவனத் தண்டிக்க முடியாது.

என்ன நாட்டாமை நீங்க சொல்லறது நியாயம் இல்லை.

ஏய்யா ஒரு அரசியல்வாதி பதவியில இருக்கறபோது அரசாங்க நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கினார்ன்னு அவர் மேலெ வழக்குப் போட்டாங்க. அவர் அந்த நிலத்தைத் திருப்பிக் கொடுத்துட்டார். அவருக்கு நீதிமன்றமே எந்த தண்டனையும் தரல. அந்தத் தீர்ப்பு இந்தப் பத்தாயிரம் ரூபாய் திருட்டுக்கும் பொருந்தும். உனக்கு பணம் திரும்பக் கெடச்சதனால இது திருட்டே அல்லன்னு தீர்ப்பு சொல்லறென். இது தான் சரியான தீர்ப்பு.

எழுதியவர் : மலர் (15-May-15, 10:03 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : sariyaana theerppu
பார்வை : 219

மேலே