நான் கவிஞனில்லை

என்
குறைந்தபட்ச அறிவுக்களஞ்சியத்தில்
சிறுசேமிப்பாய் சில வார்த்தைகளை
புரியாத பொருளில்
கொஞ்சம் நிரடாத சந்தத்தில்
கலைத்துப்போட்டு மறுபடி குவித்து
அதில்
குத்துமதிப்பாய் இரண்டெடுத்து
உச்சியில் சற்று
இடைவெளியில் வைக்க
அது
கவிதை போலவும்
தலைப்பு போலவும் தெரிகிறது

பெருங்கவிகள் உலாவரும் வீதியில்
“சமர்ப்பி” என்ற பொத்தானை
சற்றே நெருங்கும்போது
சர்வமும் நடுங்கும் நிலை

“நான் கவிஞனில்லை நான் கவிஞனில்லை”

எழுதியவர் : பிரணவன் (20-May-15, 2:32 pm)
பார்வை : 155

மேலே