வான் அரங்கம்

கூரை ஏறி கோழிப் பிடிக்கத்
தெரியாதவனும்
வானம் ஏறி வைகுண்டம் சென்றிடலாம்
இறந்தால் போதும்!
ஆனால் வானத்திலே
வெற்றிக் கொடி நட்டு வர
வாழ்க்கையில் பிரச்சினைகளை
விண்ணுக்குச் செல்லும் ஏணியாய்
உருவாக்கும் வித்தை அறிந்தவர்க்கு மட்டுமே
வெற்றிகள் வான் அரங்கம்
பரிசுகள் நட்சத்திரம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-May-15, 7:45 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : vaan arangam
பார்வை : 69

மேலே