படையல்

பலவிதமாய் பலகாரமும்
பாத்திரம் நிரம்ப பிரியாணியும்
போடப்பட்டிருந்தது படையலாக - பாட்டிக்கு
படையலை கண்டு பந்தமும் மெச்சி
கொடுத்துவச்ச மகராசி என்று
சொந்தமும் சொல்ல
யாருக்கு தெரியும்
ஒரு வாய் நீர் பருக
முடியாத ஏக்கத்திலே
இரைப்பை புற்றுநோயால்
இறந்து போனாள் என் பாட்டி என்று .

எழுதியவர் : அம்பிகா அருண்குமார் (21-May-15, 8:51 pm)
பார்வை : 58

மேலே