இனி எதையும்

தேடலின் பொழுதுகளை
முடக்கிப் பறந்து
மன்னிக்காத வேகமெடுக்கும்
சுகப்படாத சொற்களுக்கிடையில்
கொத்தித் தின்று ஆசுவாசப்படும்
ஊமைப் பார்வைகளிலிருந்து
அணையாதிருக்க
யதார்த்தமாய்த் தவறுகளையோ
தடுமாறல்களையோ
பாரபட்சமின்றிச் சேமிக்கின்ற
கேமராக் கண்கள்
இனி எதையும் விட்டு
வைப்பதாயில்லை.