நாடறிந்த இரகசியம்
நாடறிந்த இரகசியம்
எட்டாம் வகுப்பு வரை
இலவசத் தேர்ச்சி பெற்று
ஒன்பது முதல்
பட்ட வகுப்பு வரை
அனுதாப அலையில்
கரை சேர்ந்தவன்கூட
கூட்டல் கழித்தலில்
சந்தேகம் வந்தால்
கால்குலேட்டரை நாடி
சரிசெய்து விடுவான்.
நன்றாகப் படிக்கும்
ஐந்தாம் வகுப்பு மாணவன்கூட
செய்ய முடியாத
கூட்டல் கழித்தல் தவறைச்
செய்பவர்கூட
உயர்பதவிக்கு எப்படி வருகிறார்கள்?
சிந்திக்க வைக்கும் இமாலயத் தவறுகள்!
சிரிப்பதா? சினம் கொள்வதா?
மனம் நொந்து அமைதியாய்
வாயாயை மூடிக் கொள்வதா?
சொல்லுங்கள் தோழர்களே
என்ன செய்வதென்று!

