கவிதையின் வரிகளுக்குள்

ஒரு கவிதை எழுதி முடித்து
உறக்கத்தில் ஆழ்ந்தேன்..
இடையில் யாரோ எழுப்பும் குரல்
உறக்கம் கலைத்திட
அன்றுதான் புதியதாய் பிறந்தவன் போல்
கண்கள் கசக்கி பார்த்தேன்..
எதிரில் ..
சிரித்தபடி நின்றிருந்தது..
என் கவிதையின் நாயகி..
நீயா..என்றேன்..
ம்ம்ம்..
இன்னும் எத்தனை நாள்தான்
இப்படி என்னை வரிகளிலேயே
வாட விடுவாய் ..
என்று கேட்டுப் போக வந்தேன்..
என்ன..?
என்றவளை ..
தாவிப் பிடிக்க முயன்றேன்..
ஓடிப் போய்
புகுந்து கொண்டாள்
நாணத்துடன்..!
என் கவிதையின்
வரிகளுக்குள்ளே
மீண்டும்!
..
வெளியில்..
"என்னங்க ..
எழுந்து வாங்க..
டிபன் ரெடி"
என்று ..
ஒரு குரல்!
நல்ல வேளை..!
உள்ளே வந்திருந்தால்
தெரிந்திருக்கும்
ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருந்த
என் நிலை!

எழுதியவர் : கருணா (27-May-15, 1:40 pm)
பார்வை : 247

மேலே