என் தங்கை பிரேமாவுக்கு
என் தங்கை அவள்...
அண்ணன் வாணி என் மனதில் மாறது தவழ்ந்திடும் மழலை அவள்.... !
எங்கள் குடும்ப சொர்க்கத்தில் உதித்த
முதல் தேவதை அவள்....!
அன்பிற்கு இலக்கணம் அவள், ஆன்றோருக்கு செல்லப் பிள்ளை அவள்...!
எப்போதும் புன்னகையை அள்ளித்தந்து பூரிப்படயச் செய்பவள்....!
அன்னை தந்தையின் அடி பணிந்து தினமும் பூஜிக்கும் தெய்வத் திருமகள் அவள்...!
எனக்கு இளயவளாய் பிறந்து அண்ணன் எனும் அரியணையை தந்தவள்...!
தோல்வியால் நான் துவண்டு நிற்க தன் தோள் கொடுத்து எனைதாங்கும் என் தோழி அவள்....!
கருவறையில் என்னைச் சுமக்கவில்லை, என்மீது காட்டும் அன்பில் என் அன்னைக்கு நிகரானவள்...!
திங்களில் பிறந்து இன்று திங்களில் 24 வது பிறந்த நாள் காணும் எங்கள்
வீட்டுத் திங்கள் அவள்...!
என் செல்லத் தங்கம் அவள்...!
என் அன்புத் தங்கை அவள்....!