வாணிதாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வாணிதாசன் |
இடம் | : போடிநாயக்கனூர் |
பிறந்த தேதி | : 23-Oct-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-May-2015 |
பார்த்தவர்கள் | : 180 |
புள்ளி | : 12 |
மழையே மழையே.....
தயங்குகிறாய் தரணி நனைக்க.....
நீ இன்றி நாங்கள் ஏது....
தவிக்கின்றது கழனியும்.....
தவம் கிடக்கிறது கழனியில் ஏரும்...
வாடுவது உயிரும் பயிரும்....
வருந்துவது நானும் மண்ணும்....
வானம் பார்த்து வயலையும் பார்த்து...
வட்டியுடன் கடனையும் பார்த்து...
வீழ்கிறேன் என் வாழ்வையும் தொலைத்து......
அம்மா.....
தந்தை தந்த உயிருக்கு உன் உடம்பின் தசைகளை தாரைவார்த்து
உருவம் கொடுத்து உணர்வும் கொடுத்து
பத்து மாதம் பக்குவமாய் வளர்த்தாய்.....
பனிக்குடத்துள் பக்குவமாய் வளர்த்த என்னை பத்தாம் மாத இறுதியில் உன் உயிரை உருக்கி இவ்வுலகிற்க்கு அறிமுகம் செய்தாய்......
அணுதினமும் அள்ளி அரவணைத்து உன் ரத்தத்தை பாலாக மாற்றி பசிக்கும் போதெல்லாம் தாமதிக்காது பாலூட்டி, ஈ, எறும்பு எனை அண்டாது பாதுகாத்தாய்.....
கண்மூடி நான் தூங்க இரவெல்லாம் நீ கண்விழித்து தாலாட்டு பாடி என்னைத் தூங்க வைத்தாய்....
மெல்ல மெல்ல தவழ்துகொண்டிருந்த நான் மெல்ல எழுந்து ஒரு எட்டு வைத்ததை கண்டு எவரஸ்டை எட்டிப் பிடித்ததாய் வி
அம்மா.....
தந்தை தந்த உயிருக்கு உன் உடம்பின் தசைகளை தாரைவார்த்து
உருவம் கொடுத்து உணர்வும் கொடுத்து
பத்து மாதம் பக்குவமாய் வளர்த்தாய்.....
பனிக்குடத்துள் பக்குவமாய் வளர்த்த என்னை பத்தாம் மாத இறுதியில் உன் உயிரை உருக்கி இவ்வுலகிற்க்கு அறிமுகம் செய்தாய்......
அணுதினமும் அள்ளி அரவணைத்து உன் ரத்தத்தை பாலாக மாற்றி பசிக்கும் போதெல்லாம் தாமதிக்காது பாலூட்டி, ஈ, எறும்பு எனை அண்டாது பாதுகாத்தாய்.....
கண்மூடி நான் தூங்க இரவெல்லாம் நீ கண்விழித்து தாலாட்டு பாடி என்னைத் தூங்க வைத்தாய்....
மெல்ல மெல்ல தவழ்துகொண்டிருந்த நான் மெல்ல எழுந்து ஒரு எட்டு வைத்ததை கண்டு எவரஸ்டை எட்டிப் பிடித்ததாய் வி
சிறிது தலைக்கணம் எனக்கு...
நான் தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
தமிழரசி என் தாய் வயிற்றில்
தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
தமிழை தாய்மொழியாய் பெற்றதும் ஓர் செருக்கு....
தலைவணங்குகிறேன் தவமின்றி கிடைத்த இப்பிறவிக்கு...
தவம் கிடப்பேன் இனியும்
ஒரு பிறவிக்கு.....
தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
சிரிக்கின்றேன்...
மெல்லிய அதிர்வலைகளில்
ஸ்வரங்கள் சேர்கின்றன
சில நேரங்களில்
அழ வைக்கிறாய் நீ ...
மீண்டும் சிரித்திடச்
செய்கிறாய்!
மீட்சிகளின் தொடர்கையில்
உன் சிரிப்பிற்கும் மீண்டுமான
என் அழுகைக்கும் இடையில்
புரிந்து கொளல்
அள்ளி எடுக்கப்படுகிறது!!
நிம்மதியாக நீ ஓய்வெடு.....
நீ தந்த அக்கினி சிறகுகள் முழுவேகத்துடன் பறக்கத் துவங்கிவிட்டன.....
நீ ஏற்றிய எழுச்சி தீபங்கள் சுடர்விட்டு எறியத் துவங்கிவிட்டன....
நீ கண்ட கனவு இந்தியா 2020ஐ எங்கள் உயிரை கொடுத்தேனும்
நனவாக்குவோம்...
இளைஞர்களின் இதயநாயகனே நிம்மதியாக நீ ஓய்வெடு.....!!!
என் அண்ணனின் வாழ்க்கைத்
துணைவியாக வந்த அன்பின் இலக்கணமவள்...!
அன்பால் எங்கள் வீட்டை ஆள அண்ணனின் மனையாளாய் மகுடம் சூடிவந்த எங்கள் வீட்டு மகாராணி அவள்.....!
அண்ணன் எனக்கு அளித்த
தோழி அவள்....!
அண்ணி என்று உன்னை அழைப்பதில் எனக்கு அளவில்லா ஆனந்தம்
என் தாயை அம்மா என்று அழைப்பதை போல்.......
நீ பிறந்த இந்நாளில்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.....
மனதில் சுமந்த உன்னை
மணம் முடித்து உயிரில் சுமக்க வேண்டி
மண்டியிட்டேன் மதியிழந்து ஆண்டவனிடம்...!
மனமில்லையோ..? அவனுக்கு
மனதில் மட்டும் சுமந்து கொள்ளடா
மடப்பையா என எழுதிவிட்டான் விதியை...!
மன்மதனாக பிறந்திருந்தால் தேடியிருப்பேன்
மற்றொரு பெண்ணை...!
மகா புத்தனாக பிறந்திருந்தால்
மணந்திருபபேன் துறவரத்தை...!
மந்தையெனத் திரியும் மானிடப் பிறப்பானதால்
மனதிற்குள் மௌனமாய் அழுகிறேன்
மாற்று வழி யாதென அறியாமல்...!
சிறிது தலைக்கணம் எனக்கு...
நான் தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
தமிழரசி என் தாய் வயிற்றில்
தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
தமிழை தாய்மொழியாய் பெற்றதும் ஓர் செருக்கு....
தலைவணங்குகிறேன் தவமின்றி கிடைத்த இப்பிறவிக்கு...
தவம் கிடப்பேன் இனியும்
ஒரு பிறவிக்கு.....
தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...
தாய்பாலை மறப்பதற்காக
அன்னையை பிரிந்த
நாள் முதலாய் உன்
போர்வைக்குள்தான்
என் தூக்கம்...
மதிய பொழுதுகளில்
ஏத்தம் தடக்கம்
விளையாடியது..
நீ வாய்பாடு கேட்டு
நான் பாதியிலேயே
விழித்தது..
திருவிழாவிற்கு சென்று
சேரும் முன்பே..
பாதி வழியிலேயே
உன் தோளில் தூங்கியது..
பாட்டுக் கச்சேரியை
பார்க்க சொல்லி
தூங்கிய என்னை
நீ எழுப்பியது...
கொலுசை தொலைத்ததால்
எல்லோருமே திட்டி தீர்க்க
வாங்கிக்கலாம் என்று
என் அழுகையை
நீ அடக்கியதென..
நான் எதையுமே
மறக்கவில்லை...
உன் போர்வையைவ (...)