சுமைதாங்கி

அம்மா.....
தந்தை தந்த உயிருக்கு உன் உடம்பின் தசைகளை தாரைவார்த்து
உருவம் கொடுத்து உணர்வும் கொடுத்து
பத்து மாதம் பக்குவமாய் வளர்த்தாய்.....

பனிக்குடத்துள் பக்குவமாய் வளர்த்த என்னை பத்தாம் மாத இறுதியில் உன் உயிரை உருக்கி இவ்வுலகிற்க்கு அறிமுகம் செய்தாய்......

அணுதினமும் அள்ளி அரவணைத்து உன் ரத்தத்தை பாலாக மாற்றி பசிக்கும் போதெல்லாம் தாமதிக்காது பாலூட்டி, ஈ, எறும்பு எனை அண்டாது பாதுகாத்தாய்.....

கண்மூடி நான் தூங்க இரவெல்லாம் நீ கண்விழித்து தாலாட்டு பாடி என்னைத் தூங்க வைத்தாய்....

மெல்ல மெல்ல தவழ்துகொண்டிருந்த நான் மெல்ல எழுந்து ஒரு எட்டு வைத்ததை கண்டு எவரஸ்டை எட்டிப் பிடித்ததாய் வியந்தாய்....

மழலை பேச்சில் நான் உளறிய வார்தைகளை வேதம் என அன்றாடம் உச்சரித்து மகிழ்ந்தாய்....

என் பசியை நான் மறக்க, உன் பசியை நீ மறந்து நிலவை காட்டி சோறு ஊட்ட, நில்லாமல் நான் ஓட, சற்றும் சளைக்காமல் தொட்ர்ந்து வருவாய்...

வாடா என் செல்லமே என நீ கூற, நான் வளர்ந்து வரும்போது, விதியின் பிடியால் என்னை விட்டு விலகிச் சென்றாய்....

என் எதிர்காலத்தை வசந்த காலமாக்க உன் நிகழ்காலத்தை
நித்தம் நித்தம் கடின உழைப்பால் கழித்துகொண்டிருக்கிறாய்....

கடுங்குளிரிலும், மழையிலும், காற்றிலும் கஷ்டத்தை பொருட்படுத்தாது என் களிப்பிற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிராய்..,

நான் ஏட்டுக்கல்வி பயின்று வர பள்ளிக்கு அனுப்பினாய், நான் வாழ்க்கை கல்வி பயில உன் வாழ்கையையே அர்பணிக்கிராய்.....

பத்துமாதம் உன் கருவறையில் சும்ந்தாய், முன்னூற்று முப்பது மாதமாக என்னை நெஞ்சில் சுமந்துகொண்டு இருக்கிறாய்...

போதும் அம்மா...
இன்றிலிருந்து என் இறுதி ஊர்வலம் வரை உன்னை சுமக்க எனக்கொரு வாய்ப்பு கொடு.....

என்னை பெற்றெடுத்த என் அன்னை தமிழரசிக்கும்...
என் அன்னையை பெற்றெடுத்த தமிழ் அன்னைக்கும்.....
உலகில் உள்ள அத்துணை
அன்னையருக்கும்.....
அன்பு மகன் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்......

எழுதியவர் : வாணிதாசன் (8-May-16, 10:40 am)
Tanglish : sumaithaangi
பார்வை : 272

மேலே