வண்ணங்கள் கரைதலில்-கார்த்திகா

சிரிக்கின்றேன்...
மெல்லிய அதிர்வலைகளில்
ஸ்வரங்கள் சேர்கின்றன

சில நேரங்களில்
அழ வைக்கிறாய் நீ ...

மீண்டும் சிரித்திடச்
செய்கிறாய்!

மீட்சிகளின் தொடர்கையில்
உன் சிரிப்பிற்கும் மீண்டுமான
என் அழுகைக்கும் இடையில்

புரிந்து கொளல்
அள்ளி எடுக்கப்படுகிறது!!

எழுதியவர் : கார்த்திகா AK (2-Nov-15, 12:51 pm)
பார்வை : 198

மேலே