அகவழிக் காதல்

அகவழிக் காதல்
****************************************

கனமின்றி மனமிரண்டும் குணமொன்றாய் நல் ஒத்து
இனவழி நோக்காது ஈன வகைப் பற்றாது
சனநேரம் நகைத்து சினநேரம் பகைக்காது
முனகலும் முக்கலும் வெளிக்கொண்டு வாராது
தனவளம் அற்றாலும் தானமாய்த் தனைத்தந்து
ஓணானும் படர்கொடியும் ஒன்றிணைந்த காட்சியென
வானமும் மேகமுமாய் இணைபிரியா இயற்கையென
மோனையும் எதுகையும் வாய்த்திட்ட கவிதையென
அணிந்திடும் சந்தனத்தின் சுகமான நறுமணமாய்
மணந்திடும் காதலே அகவழிக் காதலாம் !

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Nov-15, 12:23 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 187

மேலே