உன் நினைவுகள்
உன் நினைவுகள்
என்னை பிழிந்து வதைப்பதை
நான்,
மொழியால் சொன்னேன்
...........,நீ கேட்க வெறுத்தாய்!
கவியால் சொன்னேன்
...........,நீ வாங்க மறுத்தாய்!
கண்ணீரில் சொன்னேன்
...........,அதை மழைத்துளி என்றாய்!
என்னையே உனக்கு
பிடிக்காத போது,
என்னையே நீ
வெறுக்கும் போது,
..........,உன் நினைவுகள் மட்டும்
என் இதயத்தை
பிடித்துக்கொண்டு ஒட்டியே
இருக்கிறதே!!!!
இது மட்டும் எப்படி சாத்தியம்!!!!
அதற்காவது பதில் சொல்லடி♥