பெண்ணழகியென்றால் அவள் தானோ

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

கண்கள் கண்டதை
நெஞ்சோடு ஒட்டி
ஓவியம் தீட்டிய
நரம்புகளிடம் கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

தூவல் துரத்திய
மைப்படா காகிதங்கள்
கசக்கி கசங்கி எழுத்தை
விழுங்கிய பொழுது கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

மூச்சுக்கள் சத்தமாக
பேச்சுக்கள் நடத்திய
மேடை அது நானே
என்னுள் சென்று கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

உரோமங்களை உழுதிடும்
காற்றினை சிறையடிக்க
உள்ளங்கை வீசி பிறகு
அடைந்த எமாற்றத்திடம் கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

உணர்வுகள் ஏந்தும்
கவர்ந்திடும் பந்தம்
தரைப்போட்டு பந்தாடும்போது
உணர்ச்சிகளிடம் கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

மீனோ விண்மீனோ
எனை வெட்க வைப்பதேனோ
அதிலும் திராணிக் கொண்டு
மீண்டும் மீண்டும் கேட்டேன்

பெண்ணழகியென்றால் அவள் தானோ ?

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (18-Jun-15, 7:28 pm)
பார்வை : 433

மேலே