தளிர்கள்
கவி நேசர்களே,
வணக்கம்-
'தளிர்கள்' என்ற தலைப்பில் நான் இங்கு எனது ஒரு வரி கவிதைகளைத் தர முயல்கிறேன். படியுங்கள் ..
சில சமயம் ஒரு வார்த்தைகூட ஒரு வரி ஆகிறது. எனது வெளிப்பாடுகளை மூன்று, இரண்டு வார்த்தைகளிலும், ஒரு வார்த்தையிலும் தர வந்துள்ளேன்.
எனது இந்த முயற்சியைப் பற்றி உங்களின் பதிவுகளை என்னொடு பகிர்ந்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
---- உங்களோடு ரோச்சிஷ்மான்
1
தோட்டம் நிறைய பலவகை மலர்கள், மணம் தள்ளி நிற்கிறது.
2
மரம் ஒன்று கண்ணில் பட்டது, உண்மை விளங்கியது.
3
அழைத்தேன், அடைந்தேன், அழுதேன்.
4
அர்த்தங்கள் தொலைந்த வார்த்தைகள்- மனிதர்களா?
5
மறுபிடியும்.. ஏ பசியே, உனக்கு எத்துனை தாகம்?
6
பலவகை கூற்றுகள்... விஷயம் உடைந்து விட்டது.
7
அழகான துணியைப்போட்டு மறைத்தார்கள், பலத்த காற்று வீசியது.
8
நனையாததொன்று மழையோடு உறவாடுகிறது
9
"தீ" என்றவுடன் அனைவரும் உள் நோக்கி பார்த்துக் கொண்டார்கள்.
10
கத்தி வெட்டியது, அனுபவம் தெரித்தது
11
வழியும் உதிரம் கதை சொல்லக்கூடும்.
12
ரத்தம் சொட்டியது, வரலாறு பேசியது.
13
கானம் இங்கே, இசை எங்கே?
14
ஸ்வரங்கள் தடுமாறுகின்றன... கானம் தீவிரமானது.
15
எழுத்துக்கள் எழுதப்பட்டன... கண்கள் தேடிக்கொண்டே இருக்கின்றன.
16
"நண்பனே இல்லை " என்றதும் என் மதி என்னை அழைத்தது
17
இருளை விலக்க விளக்கைப் போட்டேன், இதயம் எட்டிப் பார்த்தது
18
ஆழ்ந்த தூக்கத்தில்... "வாழ்க்கை" என்கிறார்கள்
19
முன்னேர முனைந்தேன், "அவசர புத்தி" என்றார்கள்
20
பிறப்பு ஒரு கேள்வி, வாழ்க்கை அதற்கு பதில்.
21
செய்திகள் வருகின்றன... உண்மைகள் ஏன் வெளி வருவதில்லை?
22
அணையும் வரையில் இருக்குமல்லவா நெருப்பு.
23
எத்துனை நாள் இப்படி?
24
சொல்லி விட்ட வார்த்தையைப் போல் வந்து விட்டது பிறவி.
25
இன்னுமா?