வெற்றிக்கான வழி

வாழ்க்கைக்கு வழி தேடு - அங்கு
வாய்ப்புகள் வந்து சேரும்!
பயிற்சியை தொடர் பாடமாக்கு - அதனால்
பட்டங்கள் பரிசளிக்கப்படும் !
தடைகளை தகர்த்தெறிய பழகு - அதில்
தன்னம்பிக்கை தலைதூக்கும் !
முயற்சியை முதலாக்கி உழைத்திடு - முடிவில்
முன்னேற்றம் முடிசூடும் !
விவேகத்தை எங்கும் விதைத்திடு - அதிலிருந்து
வெற்றிகள் மட்டுமே விளைச்சலாகும்...!