ஆசிரியர்
எதிர்கால பயனை நோக்கி- நிகழ்கால
அறிவை கூட்ட இருப்பது
ஆசிரியர் நாட்டம்!
அவரை நெஞ்சார வாழ்த்தி,
மனதார மதித்து கவிதையில்
காட்டுவோம் நன்றிக்கூட்டம்!!
♦
எத்தனையோ கல்வி
கற்றிருந்தும் கூட - கற்றுக்
கொடுப்பதே இன்பமென மகிழ்வார்
மற்றதொழிலை விட!
♦
கூர்மையாக பார்ப்பார் ,கண்ணில்
எண்ணெய் ஊற்றிருப்பார்!!
பாட நடுவில் தூங்கினால் தூக்கம்
தோல்வி கொடுக்குமென்பார்!
♦
பல கற்பனை விரித்த
புத்தகம் படிப்பார் - படித்த
அறிவை மாணவருக்கே
கொடுப்பார்!!
இவர் போல் பெரிய
மனம் கொண்டவர்,
7கோடி மக்களில்
எவர்தான் கண்டவர்?
♦
நாளும் நாளும் அறிவை
தந்தே நிரப்பிவிட்டார் நம்மை!
நாளை வாங்கும் புகழோ
இங்கே மறைத்துவிட்டது
அன்னவரின் பெருமையை!!
♦
வறுமை கோட்டில் வாழ்கிறார்
சில ஆசிரியர் இன்று - அவரை
ஒரு நாள் பெருமை படுத்தி
கூறுவோம் நம் அறிவை
தந்தவர் என்று!!
♦