velvizhi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : velvizhi |
இடம் | : Nagercoil |
பிறந்த தேதி | : 02-Feb-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 33 |
விழிப்புடன் வாழ விரும்பும் மனம்
தனக்காக வாழ்ந்தபின் பிறருக்காக வாழுங்கள். இல்லை எனில் பிறருக்கு உதவ நீங்கள் இருக்க மாட்டீர்கள்
தொலைந்து போன நேற்றை
தேடுவதிலேயே இன்றையும் சேர்த்து
தொலைத்து விடுகிறோம்!- தொடர்ந்து
தொலைக்கப்படுவது தெரியாமலேயே
பிறக்கும் இன்றிற்காய் தினமும்
இமைகளை திறக்கிறோம் நாம் !
தொலைவதும் நிற்கவில்லை - அதை
தேடுவதையும் நாம் நிறுத்தவில்லை !
நாளை இருக்கும் நம்பிக்கையில்
தொடர்ந்து நாட்களை நகர்த்துகிறோம்..!
ஏர் பிடித்த கைதனிலே
ஏறவில்லை காசு பணம் ..
எதற்கும் ஏக்கம் கொண்ட
ஏழையாக இருப்பதுவே
எப்போதும் உழவர் நிலை...!
எதிர்படுவோரை எப்படியும்
ஏமாற்றி சுகம் கான்போரே,
எங்கும் தென்பட்டால்....
ஏர் பிடிப்பவன் - தொடர்ந்து
ஏற்றம் காண்பதும் எந்நாளோ...!
கடந்துவந்த பாதையில்
இழந்தவை ஏத்தனையோ ...
மீதம் இருக்கும் பயணத்தில்
இருப்பவை மிஞ்சவேண்டுமென்ற
போராட்டத்தில் மனிதன் - தன்னில்
மனிதம்தனை மறக்கிறான் ..!
தன்னையே இழக்கிறான்...!
ஆடம்பரங்களுக்கு அடிமையாகி
உழைப்போரை ஆளுகிறான் !
உணர்வானா ? உழைப்பின் உன்னதத்தை !
மறந்த மனிதம்தனை மதிப்பானா ?
மனிதனாய் மறுவாழ்வு பெறுவானா ?
பதிலை நோக்கிய வாழ்க்கை பாதை ...
பயணிக்கிறது தொடர்கதையாய் ..!
கண் சிமிட்டி கடந்து சென்றாய்....
என்னுள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம்.
உன்னை பின்தொடர மனமும் கொண்டது ஏக்கம்!
தொடர் பார்வை பரிமாற்றம் - நீதான்
என்னவள் என்று எனக்கு உணத்திச் சென்றது!
உன்னை நான் உயிரில் உணர்ந்துவிட்டேன்
என்ற போதிலும், உன்னிடம் சொல்ல
தைரியம் தேடி தவிக்கிறேன். - என் உணர்வை
உணர்ந்தும் வெளிக்காட்டாமல் நீ...
உன்னை கண்டதும் உயிரில் ஏதோ மாற்றம்
உடனடியாய் உருப்பெறுகிறது- காயம்
ஏதும் இன்றி உயிர் வலி, உடல்முழுவதும்...
பரவி பலி இல்லாமல் உயிர் எடுக்கிறது!
காதல் சுகமானதா....? யார் சொன்னது..?
வெளியில் தெரியாத வலி தரும் ரணம் காதல்...
தோற்கும்போது வரும் அழுகை - உன்
தோல்வியை கரைத்திடாது...
வேதனையில் வாடுவதால் - உந்தன்
கடந்தகாலம் மாறிடாது...
சோகம் என்பதை உன்னுள் புதைப்பதால்
உலகம் உனக்காக பரிவு காட்டாது...
உந்தன் துயரத்தை விட்டு விட்டு,
மாறாத முயற்சியுடன் தொடர்ந்து போராடிடு...
மாற்ற முடியாத கடந்த காலம்
மனதில் நிலைபெறாமல் போகட்டும்...
நீயே முயன்று மாற்றிடு - இனிவரும்
உன்னதமான உன் எதிர்காலத்தை ....!
மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை
நினைத்தபடி உருவாக்கு உன் எதிர்காலத்தை
உறவுகளையும் உணர்வுகளையும்
உயர்வாக கருதிவந்த உன்னதநிலை
உருப்பெறாமல் போய்விட்டது இன்று ...
பாசமும் பரிவும் பணத்தின்
பின்னால் பயணப்படுகிறது ...
நட்பும் அதன் நேசமும்
நயவஞ்சகத்தால் நசுக்கப்பட்டு
நாசூக்காய் மறைகிறது ...
காலமும் நேரமும் பிறர் காசுக்காக
கனத்த இதயத்துடனும்
கலகலப்பூட்ட துணிகிறது ...
நேர்வழியில் நடப்பதும்,
வேண்டியோருக்கு உதவுவதும்
உதவாக்கரைகளின் உயர்குணமானது ...
சுயநலத்தின் வேர்களில் முளைக்கும்
பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நேசிப்பை
எதிர்பார்த்தல் ஏக்கத்தில்தான் முடியும்..!
நாம் கொண்ட மனதில் - மனிதனை
மதிப்பதற்கு இடமில்லை எனும்போது,
அம்மனிதனில் பிறக்கும் இளந்தளிரி
வந்தாச்சு புது வருஷம்
வாங்கியாச்சு புது டைரி
எப்பவும் போல அப்பா காசுல
எடுப்பா இருக்கு என் டைரி
விடிய விடிய முழிச்சிருந்து
பண்ணண்டு மணிக்கு பட்டாசு
வெடிக்கனும்னு அண்ணன் வெச்சிருந்தா ஒரு பிளானு..
நல்ல தூங்குரவனயெல்லம்
நடு ராத்திரி எழுப்பி விட்டு
வாழ்த்துக்கள் சொல்லனும்னு
வெச்சுருந்தேன் ந ஒரு பிளானு....
முதல் விஷ் யாருக்கு பண்ணலாம்னு
யோசிக்கும் போதே அம்மா
கிச்சனில் கிண்டிய கேசரி
வாசம் மூக்கை தாண்டி
மூளையை தொட்டது
அண்ணனோட ஆண்ட்ராய்ட
அப்புடியே எட்டி பார்த்தா
புத்தாண்டு வாழ்த்துக்கள
காப்பி பேஸ்டில் கடத்தி கொண்டிருந்தான்
இந்தா டைம் ஆயிருச்சுல...
மணி பதினொன்னு அம்பதொம
நண்பர்கள் (20)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

பிரகாஷ்
சேலம், தமிழ்நாடு

தீனா
மதுரை

ராம்
காரைக்குடி
