நாள்

நாள்

தொலைந்து போன நேற்றை
தேடுவதிலேயே இன்றையும் சேர்த்து
தொலைத்து விடுகிறோம்!- தொடர்ந்து
தொலைக்கப்படுவது தெரியாமலேயே
பிறக்கும் இன்றிற்காய் தினமும்
இமைகளை திறக்கிறோம் நாம் !
தொலைவதும் நிற்கவில்லை - அதை
தேடுவதையும் நாம் நிறுத்தவில்லை !
நாளை இருக்கும் நம்பிக்கையில்
தொடர்ந்து நாட்களை நகர்த்துகிறோம்..!

எழுதியவர் : ந. வேல்விழி (25-Dec-15, 5:22 pm)
Tanglish : naal
பார்வை : 168

மேலே