விவசாயி

ஓடு வீடு தங்குக் கோட்டை
அளகு ஒலித்த அதி காலை
பதுங்கிய பரிதி பாயும் முன்
மார்போ டணைத்த மண் வெட்டி

புயம் கொண்ட துண்டு; துடிப்போடு
மயில் அகவும் காட் டருகே
விண் கணித்து வித்திடும் கழனியில்
உழுகை பணி கழுகு பார்வையில்

வாரம் சென்று வான் மழை
மனம் எங்கும் மலரும் பூமழை
சேற்றையும் நாற்றையும் நன் நட்பாக்கி
களையையும் எலியையும் வன் எதிரியாக்கி

சேற்றில் மலரும் கால்தடம் கமலம்
முதுகு வளைத்து வரப் பெடுத்து
கழனி எழில் கண்படவே; உழைப்பில்
உள்ளம் களிக்க புள்ளம் மறுக்க

பணை தேடி நீர் பாயும்
நிலத் தாகம் முழு தனித்து
தன் தாகம் தனைத் தவிர்த்து
கயம் வயவை நித்தம் காப்பர்.

அரவு கண்டு விதிர்ப் பில்லை
பயிர் ஒன்றும் உயிர் எனவே
விழி இரண்டாய் கண் ணிடுவார்.
கனவு கொள்ள தினம் காப்பார்.

அளை அதற்கு நிலக் கொடை
காரணம், அளியின் கொடை அவரகம்.
மற்றோன் முது கதை நிமிர்த்திடவே
தம் முதுகு தினம் குனித்திடுவார்.

மரத்தடி நிழல் மையலிட்ட தூக்கம்
ஆசைக் கோர் கஞ்சி தூக்கு
அளவு சாப்பாடு அகமிகு களிப்பு
களைகள் வதை பயிர்கள் அரண்.

குறிக்கோள் அது குறையும் மாறா
மூன்று காலம் சேய் காத்து
ஆசை காலம் அது குயிற
காதல் பற்றிய கதிர் குழையை

மீதி தண்டு தரை நிறுத்தி
நெல் தங்கம் நிறைத் தெடுத்து
நிலம் பரப்பி நாள் காய்த்து
கோணி நிரப்பி அறை அடைத்து

காலம் கனிய இறை கொடுக்க
விலைக்கு விட வெளி வரும்
விலை வீழும் விழி வினவும்
காடு ழைத்து கடினப்பட்டு கடையில்

விலை இல்லை;வீணாக விதைத்து
மாடாக உழைத்து இறைக்கு ஈண்டு
அறுத்து இறுதியில் இல்லை விலை
விவசாயி தானுழைத்து விண் விரையவா?..!!

எழுதியவர் : செல்வா.மு (தமிழ் குமரன்) (25-Dec-15, 9:06 pm)
Tanglish : vivasaayi
பார்வை : 897

மேலே