மனிதம் தேடும் மனிதன்

உறவுகளையும் உணர்வுகளையும்
உயர்வாக கருதிவந்த உன்னதநிலை
உருப்பெறாமல் போய்விட்டது இன்று ...
பாசமும் பரிவும் பணத்தின்
பின்னால் பயணப்படுகிறது ...
நட்பும் அதன் நேசமும்
நயவஞ்சகத்தால் நசுக்கப்பட்டு
நாசூக்காய் மறைகிறது ...
காலமும் நேரமும் பிறர் காசுக்காக
கனத்த இதயத்துடனும்
கலகலப்பூட்ட துணிகிறது ...
நேர்வழியில் நடப்பதும்,
வேண்டியோருக்கு உதவுவதும்
உதவாக்கரைகளின் உயர்குணமானது ...
சுயநலத்தின் வேர்களில் முளைக்கும்
பிஞ்சுகளின் நெஞ்சத்தில் நேசிப்பை
எதிர்பார்த்தல் ஏக்கத்தில்தான் முடியும்..!
நாம் கொண்ட மனதில் - மனிதனை
மதிப்பதற்கு இடமில்லை எனும்போது,
அம்மனிதனில் பிறக்கும் இளந்தளிரில்
மனிதத்தை தேடினால் கிடைக்குமோ ?
காலத்தாலும் பணத்தாலும் நாம் மறந்த
மனிதத்தை மனதினில் பதியவைப்போம் !
என்றும் மாறா மனிதநேயம் மனிதரில்
உயிர்பெற காண்போம்!- மனிதன்
மனிதனாய் மாற வழிவகுப்போம் !

எழுதியவர் : ந. வேல்விழி (23-Jun-15, 4:09 pm)
பார்வை : 462

மேலே