காதலின் வலி

கண் சிமிட்டி கடந்து சென்றாய்....
என்னுள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம்.
உன்னை பின்தொடர மனமும் கொண்டது ஏக்கம்!
தொடர் பார்வை பரிமாற்றம் - நீதான்
என்னவள் என்று எனக்கு உணத்திச் சென்றது!
உன்னை நான் உயிரில் உணர்ந்துவிட்டேன்
என்ற போதிலும், உன்னிடம் சொல்ல
தைரியம் தேடி தவிக்கிறேன். - என் உணர்வை
உணர்ந்தும் வெளிக்காட்டாமல் நீ...
உன்னை கண்டதும் உயிரில் ஏதோ மாற்றம்
உடனடியாய் உருப்பெறுகிறது- காயம்
ஏதும் இன்றி உயிர் வலி, உடல்முழுவதும்...
பரவி பலி இல்லாமல் உயிர் எடுக்கிறது!
காதல் சுகமானதா....? யார் சொன்னது..?
வெளியில் தெரியாத வலி தரும் ரணம் காதல்...

எழுதியவர் : ந. வேல்விழி (14-Jul-15, 4:47 pm)
Tanglish : kathalin vali
பார்வை : 137

மேலே