உறவு ஒன்று உயில் எழுதுகிறது -19

நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
உடைந்துபோகிறது கண்ணீர்
உன் முகம் பார்க்காமல் உருவம் பார்க்கும் போதெல்லாம்
உள்ளம் முழுக்க வலிக்கிறது.

நிஜங்களை தொலைத்து விட்டு
நிழல்களோடு வாழ விரும்பவில்லை.
கனவுகளை தொலைத்து விட்டு
கண்ணீரோடு வாழ்வது கவலையளிக்கிறது.

உன் அன்பைத் தொலைத்த பின்
அரைநொடி வாழ்விலும்
அக்கறை காட்ட மறுக்கிறது என் மனது.

அலட்சியப் படுத்தி விட்டு நீ நகர்ந்து போகும்
ஒவ்வொரு அடியிலும் என் முதுகு வலிக்கிறது.
ஆனாலும் அழகே உன்மீது எனக்குள்ள
அன்பும் அக்கறையும் குறையவே இல்லை.

நான் உன்னை இழக்கவில்லை
நீதான் என்னை இழந்து கொண்டிருக்கிறாய்.
பின்னொருநாளில் நீ என்னை தேடும்போது
நீ தொலைத்த இடத்தில்
நானிருக்க மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம்.

வார்த்தைகள் மறந்து போகும்
வடிவங்கள் மறைந்து போகும்
அட அன்பு கூட
அட்ரஸ் மாறி அடுத்த வீட்டுப் படி ஏறும்
ஆனாலும் நீ தந்த நினைவு மட்டும்
நிரந்தரமாய்......

எழுதியவர் : parkavi (14-Jul-15, 6:38 pm)
பார்வை : 84

மேலே