காதல் குற்றமே

காதல் குற்றமே,
கடைசி வரை
கண்களால் பேசாத
காதல் குற்றமே..

காம கண் கொண்டு
களிப்பில் மனம் கொள்ளும்
காதல் குற்றமே...

அவளை
நாம் நாடினாலும்
அவள்
விழிகள்
நம்மை தேடும் வரை
ஒரு தலை காதல் குற்றமே..

ஒரு முறை காதலும் குற்றமே..
உண்மை காதலும் குற்றமே..

கல்லாய் போன மனங்களுக்கு
கசிந்து உருகும் காதலும் குற்றமே..

பொய்யான உலகில்
ஊறிப்போன நெஞ்சங்களுக்கு
மெய் காதல் குற்றமே..
மெய் தீண்டும்
காதல் மட்டும் இங்கு மிச்சமே..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (14-Jul-15, 6:58 pm)
பார்வை : 86

மேலே