நிலா ரசிகன் -மடந்தை ஜெபக்குமார்

உன்னை
நினைத்து
காத்திருக்கிறேன்!

சிலுவையில் அறைந்தால் - கூட
மூன்று நாள்
தண்டனையோடு முடிந்திருக்கும் -ஆனால்
உன்னை
நினைத்து காத்திருக்கும்
எனக்கு
இருபது ஆண்டுகால
இதய
சிறைதண்டனையா பெண்ணே ?

உன்
முகம் காணும் வரை
முகவரி இல்லாமல் தேடுகிறேன் ......
என்
இதயத்தில்
நான்
வரைந்திருக்கும்
உன்
முகம் காணும் வரை !

உன்னை தேடுவதில் ........................

என்
உடலோ சோர்வடைந்தாலும்
என்
உள்ளமோ
இன்று, நாளை, என்று உன்னை தேடுகிறது !



நூறு கோடி பெண்களிலும்
உன் முகம் தெரியவில்லை ......


பூமியின் மகளாய் இல்லாவிடின்
நிலவின் மகளாய் இருப்பாயோ !

இதனால் .........

இரவை காதலிக்க ஆரம்பித்து விட்டேன்
பகலை வெறுத்து !

நடுநிசியில்
காத்திருக்கிறேன் உனக்காக பெண்ணே .........

நிலவாய் - நீ
கவிஞனாய் -நான்
உயிராய் காதல் ....

எழுதியவர் : மடந்தை ஜெபக்குமார் (14-Jul-15, 7:02 pm)
பார்வை : 137

மேலே