மழையில் நடந்துப் போகும் காதல் ஜோடி

மழையில் நடந்துப் போகும் காதல் ஜோடி
மாலை நேர மழைத் துளி
மண்ணில் விழ
அவள் மனம்
என் மாடிச் சாய
அவளின் கால் கொலுசு
தண்ணீரில் தவழ்கிறது தாமரையாக
கைக்கோர்த்து நடக்கையில்
அவளின் காதல் சத்தம்
என் மீது விழ
மௌனங்களால் பேசினோம்
மனதைத் தழுவினோம்
நிமிடங்கள் நிசப்தமாகி
வருடங்கள் மரணிக்கிறது
எங்கள் வருகையைப் பார்த்து
வெயிலும் மழையும்
வந்து வந்துப் போக
அந்த வானவில்லும்
வளைந்து நிற்கிறது
எங்கள் வருகையைப் பார்த்து
அமைதியின் நடுவில்
அழகிய கோபுரத்தில்
கணவன் மனைவியாக இணைவோம் .
கௌதம்