வாழ்க்கை பயணத்தின் தொடர்கதை

கடந்துவந்த பாதையில்
இழந்தவை ஏத்தனையோ ...
மீதம் இருக்கும் பயணத்தில்
இருப்பவை மிஞ்சவேண்டுமென்ற
போராட்டத்தில் மனிதன் - தன்னில்
மனிதம்தனை மறக்கிறான் ..!
தன்னையே இழக்கிறான்...!
ஆடம்பரங்களுக்கு அடிமையாகி
உழைப்போரை ஆளுகிறான் !
உணர்வானா ? உழைப்பின் உன்னதத்தை !
மறந்த மனிதம்தனை மதிப்பானா ?
மனிதனாய் மறுவாழ்வு பெறுவானா ?
பதிலை நோக்கிய வாழ்க்கை பாதை ...
பயணிக்கிறது தொடர்கதையாய் ..!