மாறுவோம் மாற்றுவோம்
மதவெறி இனவெறி
சாதிவெறி மொழிவெறி
பணவெறி போதைவெறி
நிறவெறி நிலவெறி
இவைகள் எதுவும்
இல்லதா மனிதர்களாய்
நாம் மாறுவோம் !
வறுமையின்றி தீமையின்றி
ஊழலின்றி பொய்மையின்றி
கல்லாமையின்றி இல்லாமையின்றி
நோயின்றி சோம்பலின்றி
இவைகள் எதுவும் இன்றி
நம் நாட்டை
வளர்ச்சி பாதையில் மாற்றுவோம் !
வாருங்கள்
என் இந்திய இளைஞர்களே
மனிதநேய மனிதர்களாக
நாம் மாறுவோம் !
வலிமைமிக்க வல்லரசாய்
நம் இந்திய திருநாட்டை
நாம் மாற்றுவோம் !