புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வந்தாச்சு புது வருஷம்
வாங்கியாச்சு புது டைரி
எப்பவும் போல அப்பா காசுல
எடுப்பா இருக்கு என் டைரி
விடிய விடிய முழிச்சிருந்து
பண்ணண்டு மணிக்கு பட்டாசு
வெடிக்கனும்னு அண்ணன் வெச்சிருந்தா ஒரு பிளானு..
நல்ல தூங்குரவனயெல்லம்
நடு ராத்திரி எழுப்பி விட்டு
வாழ்த்துக்கள் சொல்லனும்னு
வெச்சுருந்தேன் ந ஒரு பிளானு....
முதல் விஷ் யாருக்கு பண்ணலாம்னு
யோசிக்கும் போதே அம்மா
கிச்சனில் கிண்டிய கேசரி
வாசம் மூக்கை தாண்டி
மூளையை தொட்டது
அண்ணனோட ஆண்ட்ராய்ட
அப்புடியே எட்டி பார்த்தா
புத்தாண்டு வாழ்த்துக்கள
காப்பி பேஸ்டில் கடத்தி கொண்டிருந்தான்
இந்தா டைம் ஆயிருச்சுல...
மணி பதினொன்னு அம்பதொம்பது...
ஆசையா வளர்த்த நகத்த
டென்சன்ல கடிச்சு கொதறி...
கடிகரதையே பார்த்து
கடைசி அஞ்சு நொடி ஆச்சு
அஞ்சு
நாலு
மூனு
ரெண்டு
ஒன்னு
ஹாப்பி நியூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..............
பட பட பட பட பட பட.....
அண்ணன் வெச்ச தவ்சண்ட் வாழ....
அலப்பரையை கூட்ட....
அடுத்த வீட்டு ஆச்சி
அரக்க பறக்க வந்து கேட்டாங்க
"ஏலே என்னாலே இங்க சத்தம்
மனுஷ மக்க துங்க வேண்டாமா??"
"ஆச்சி இன்னிக்கு நியூ இயர்
அப்புடி தான் இருக்கும்"
சொல்லி கொண்டே அடுத்த பட்டாசை
கையிலெடுத்தான் அண்ணன்......
"புது வர்சம் ஆச்சி
அதான் இப்புடிலாம் "
அம்மா கொடுத்த கேசரியை
கொறித்து கொண்டே சொன்னேன் நான்....
"மார்கழி மாசத்துல என்னாலே
வருஷ பொறப்பு...
சித்திரைக்கு தான் இன்னும்
நாள் கெடக்கே"
பொலம்பிக்கொண்டெ போய் படுத்தார் ஆச்சி
"மார்களிக்கும் நியூ யிற்கும்
என்னக்கா சம்பந்தம்"
மண்டையை சொறிந்தால்
பக்கத்து வீட்டு பாப்பா
எனக்கு புரிந்தது
எவன் வீட்டு கல்யாணத்துக்கோ
நாம பந்தக்கால் நடுரோம்னு....
வாயில் இருக்கும் கேசரி
கசந்தது மெல்ல....
அமைதியை போய் கேலண்டரில்
சித்திரை ஒன்றை தேடினேன்
நாளைக்கே தமிழ் நாட்குறிப்பு
வாங்க வேண்டுமென்ற முடிவோடு.....
வாழ்த்துக்கள் நம் புத்தாண்டிற்க்காக....