எனது டெல்லி வாழ்க்கை

ஓராயிரம் மைல் தாண்டி டெல்லி வந்தேன்.....

ஊரிலே ஏதேதோ சொல்லி வந்ததேன்...

நெனச்சது போல இல்ல டெல்லிநாடு....

இது நெருப்பாய் சுட்டெரிக்கும் கள்ளிக்காடு....

வெயில் என்னை கொளுத்த வெள்ளரிக்கா வாங்கி வந்தேன்...

வாங்கி வந்து வச்சதுமே வத்தலா மாறிருச்சே!....

செத்தாலும் வர மாட்டேன் இனியிங்கே.....

நான் செத்தாலும் வர மாட்டேன் இனியிங்கே......

பத்தலயே வீட்டுக்கு பணமங்கே!...

பொறுக்கவும் முடியலயே!!!

வெறுக்கவும் முடியலயே!!!!

ஆறாவது மாடியில அமர்ந்திருந்த வேளயில....

அப்பப்பா நிலநடுக்கம் அல்லாரும் ஓடுறாங்க!.....

கையும் ஓடலயே!! காலும் ஓடலயே!!

உடல் மட்டும் ஓடிருச்சே உயிர காப்பாத்திக்க...

கீழ போயி பாத்ததுமே கிறுக்கே பிடிச்சுருச்சே....

எப்பப்பா......

எத்தனயோ பேரங்கே.... எண்ணவே முடியலயே...

நிலமெல்லாம் ஆடுதுங்க.....

நெஞ்சே வெடிக்குதுங்க....

பலமான கட்டடமும் பம்பரமா சுத்துதுங்க....

மானங்கெட்ட மக்கள் கொஞ்சம் மனங்கெட்டு போயிட்டாங்க....

கண்ட பாக்கு போடுறாங்க.... கண்டபடி துப்புறாங்க...

கலையா பொண்ணு வந்தா கற்பையே அழிக்குறாங்க...

வெள்ளயினா வெள்ளயிங்க வெள்ளக்காரி போல இங்க....

பொண்ணு எல்லாம் பொண்ணு இல்ல புதுசான டெல்லியில....

டீசர்ட்டு போட்டு இங்க வேஷக்காடு ஆனதுங்க...

எழுதியவர் : பாலா திருச்சி (21-Jun-15, 12:39 am)
பார்வை : 77

மேலே