பாதிக்கப்பட்டவள்

வாழதானே நினைத்தேன்
சீரழித்து விட்டாயே..

உன் கண்களுக்கு சக
உயிராய் படவில்லையோ..

வெறும் சதையாய் மட்டுமே
காட்சி ஆனேனோ..

பாதிக்கப்பட்டவளாய் நான்கு
நாட்கள் அலசப்படுவேனே..

பின்னாளில் எவருக்கும்
மதிப்பில்லாத உயிராவேனே..

சிலதுளிகளில் நீ சிதைத்தாய்
சமுதாயம் தினமும்...

எண்ணம் எப்போதும் நிலையில் இருக்க..
பெண்ணுக்கு சொன்ன ஆட்கள்
சற்று ஆண்களுக்கு
உணர்த்திவிட்டு போங்களேன்...

இப்படிக்கு
பாதிக்கப்பட்டவள்


- வைஷ்ணவ தேவி

எழுதியவர் : வைஷ்ணவ தேவி (21-Jun-15, 12:31 am)
பார்வை : 220

மேலே