நிஜம் நிழலாகிறது
புழக்கடையில்
பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாய்..
சாம்பல் பூசிக்கொள்கிறது
சூரியன்..
இன்றும் கூட
கோலச்சிக்கல்கள்
பிரிக்க முடியவில்லையாம்..
தோற்றுவிட்டே மறைந்திருந்தது
தேய்பிறை நிலா...
இந்த வேப்பமரங்களுக்குத்தான்
எத்தனை வஞ்சனை .....
ஒவ்வொருநாளும் உனக்கு
எட்டிவிடும் உயரத்திலேயே
துளிர்த்து வைக்கிறது....
ம்க்கும்...! அதற்குள்ளாகவே
இந்த.
ரோஜாப் பூக்களும்....
ஒட்டிக் கொள்வதற்காய்
இட்டிலிகளைத் திட்டாதே...
நீ திட்டுவதற்காகவே
அவைகள் ஒட்டிக்கொள்ளலாம்...
இப்படியாக எழுதிக்
கொண்டிருக்கையில்
பீட்சா வந்துவிட்டதென
குறுஞ் செய்தி சொன்னது.....
இன்றைக்காவது... ஒவனைத்
துடைத்துவிட்டு
சூடுசெய்ய வேண்டும்.....