தந்தையே

தந்தையே...

உன் வளையத்திற்குள் எங்களின் வாழ்வு
எங்களின் வாழ்க்கை சக்கரம் நீ
ஏற்றம் காண செய்த ஏணி நீ
உழைத்ததும் ஓடானதும் எங்களுக்காய்…..

உன் நிழலினில் எங்களின் ஓய்வு
எங்களின் இல்ல வேப்பமரம் நீ
ஜீவனுள் சுவாசமாய் நீ
வீசுவதும் விசிறுவதும் எங்களுக்காய்.....

உன் ஓடையில் எங்களின் பயணம்
எங்களின் பயண பரிசல் நீ
செலுத்தும் பரிசல்காரன் நீ
துடிப்பதும் துடுப்பிடுவதும் எங்களுக்காய்...

உன் வெளிச்சத்தில் எங்களின் விடியல்
எங்களின் ஞாயிறு நீ
ஒளி தரும் தீபமும் நீ
எரிவதும் உருகுவதும் எங்களுக்காய்....

உன் தோள்களில் எங்களின் சுமைகள்
எங்கள் துக்கத்தின் தொட்டில் நீ
எங்களுக்கான சுமைதாங்கி நீ
தாங்கியதும் தவித்ததும் எங்களுக்காய்...

உன் முதுமையில் எங்களின் சேவகம்
சொர்க்கம் காட்டிய சொர்க்கம் நீ
நாங்கள் தொழும் தெய்வம் நீ - தந்தையே
எங்களின் அர்ப்பணிப்புகள் இனி உனக்காய்...


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தந்தையர்க்கும் தந்தையாகப் போகிறவர்களுக்கும் இனிய
தந்தையர் தின வாழ்த்துக்கள்....

அன்புடன்,
சொ.சாந்தி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

(குறிப்பு - அமரர் சுசீலா மணி போட்டிக்காக இந்த தளத்தில் பதிவிட்ட கவிதையிலிருந்து சிறு மாற்றம் செய்து மீண்டும் பதிவிடுகிறேன் 14-06-2015 அன்று மயிலாப்பூரில் இலக்கியச் சோலை பத்திரிக்கை தந்தையர் தின சிறப்பிதழை வெளியிட்டது. அந்த சிறப்பிதழில் வெளியான கவிதை இது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அன்று திரு திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் பேராசிரியர் உலக நாயகி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற கவி அரங்கினில் இந்த கவிதையை வாசித்ததில் மகிழ்ச்சி)

எழுதியவர் : சொ.சாந்தி (20-Jun-15, 10:19 pm)
Tanglish : thanthaiye
பார்வை : 118

மேலே