லாடம்

போர்க் குதிரைகள்
லாடம் கட்டிக் கொண்டு
புறப்பட்டன புழுதி கிளப்பி

ரேஸ் குதிரைகளும்
லாடம் கட்டிக்கொண்டு
புறப்பட்டு ஓடின

இலக்கு இரண்டிற்கும் வெற்றிதான்
இலட்சியம் வேறானது !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-15, 10:16 pm)
பார்வை : 81

மேலே