குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம்

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

(இ-ள்) தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித் தீராதென்றெண்ணி அவனைச் சார்தல்.

கட்டளைக் கலித்துறை

வெயிற்கே நிழலும் பசிக்கே யமுதும் வினைக்கறமும்
பயிர்க்கே புனலுமுண் டாயது போற்பண்டு வாரியுண்ட
தயிர்க்கேகட் டுண்ட திருமால் குலோத்துங்கன் றஞ்சைவெற்பில்
உயிர்கேத நீக்க நமக்குயிர்ப் பாங்க னொருவனுண்டே! 42.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (27-Apr-24, 3:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே